கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனம் மோசடி - ஏமார்ந்த 200க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளிப்பு

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனத்தில் பணம் தெலுத்தி ஏமாந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் மனு அளிக்க குவிந்தனர்.


கோவை: நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம் என்று கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக போலியான வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் பேரிடம் சுமார் 1300 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் புகாரளிக்க காவல்துறை தரப்பில் அறிவுறுத்தியிருந்தனர்.



இதனால் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க குவிந்தனர்.



இது குறித்து பணம் இழந்தவர்கள் கூறுகையில், காவல்துறையுனரின் வழிகாட்டுதலில் ஏற்கனவே புகாரளித்த நிலையில் மீண்டும் புகாரளிக்க வந்ததாகவும் இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர், ஆனால் எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனவும் அந்த குழுவையும் கலைத்து விட்டார்கள் எனவும் தெரிவித்தனர். நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக,சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம். நிதி நிறுவனத்தின் பேரில் பல்வேறு இடங்க்களில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி போட்டுள்ளார்கள். அவற்றை பறிமுதல் செய்தாலே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை செலுத்த முடியும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...