பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் முன்பு வாயில் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும், புத்தக பயிற்சிக்கு யுஜிசி நெறிமுறைகளை படிக்கால நீட்டிப்பு வழங்கி கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் பதவிக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், இதர அரசு ஊழியர்களுக்கான பொதுவான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் TNGUTA, AUT, MUTA ஆகிய சங்கங்களும் இணைந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...