தமிழக அரசின் சான்றோர் விருதுகள் - விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் அழைப்பு

தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் சான்றோர் விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிடுள்ள அறிக்கையில்,

2023-2024 ஆம் நிதியாண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்படிவங்களை பெற்று 10.11.2023 க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...