கோவையில் திமுக பெண் நிர்வாகி வீட்டில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

திமுக பிரமுகரான மீனா ஜெயக்குமாரின் மகனான ஸ்ரீராமின் இல்லம் மற்றும் திமுக முன்னாள் கவுன்சிலர் சாமி இல்லம் ஆகிய இரு இடங்களில் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்துள்ளது.


கோவை: கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்கள், பொறியியல் கல்லூரிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மீனா ஜெயக்குமாரின் இல்லம், ஸ்ரீராமின் அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் 2 வது நாளாக சோதனை தொடர்கிறது. வருவமான வரித்துறையினரின் அறிக்கைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரியவரும்.

திமுக பிரமுகரான மீனா ஜெயக்குமாரின் மகனான ஸ்ரீராமின் இல்லம் மற்றும் திமுக முன்னாள் கவுன்சிலர் சாமி இல்லம் ஆகிய இரு இடங்களில் மட்டும் சோதனை நிறைவடைந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...