ஆவின் பாலகம் அமைக்க வங்கி கடன் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.


கோவை: ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவேரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனைமுகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார கர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவேரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடுசிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர நட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகப்பட்சம் ரூ 2.25 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50% (விழுக்காடு) அல்லது ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் (Freezer) குனிர்விப்பான் (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகப்பட்சம் ரூ. 2.25 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50% (விழுக்காடு அல்லது ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.(www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...