வால்பாறையில் தேயிலை தோட்டம் தொழிலாளர் குடியிருப்பை சேதப்படுத்திய 9 காட்டு யானைகள்

இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் பகுதி மாடல் காலனி என்ற இடத்தில் உள்ள கலைச்செல்வி என்பவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பீரோ, டிவி, கட்டில், உணவுப் பொருட்கள் போன்ற பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.



இந்நிலையில் வால்பாறை அருகே இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் பகுதியில் மாடல் காலனி என்ற இடம் உள்ளது. இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 9 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது அங்கு கலைச்செல்வி என்பவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பீரோ, டிவி, கட்டில், உணவுப் பொருட்கள் போன்ற பொருள்களை உடைத்து சேதப்படுத்தியது.



வீட்டில் இருந்த கலைச்செல்வி மற்றும் அவரது அம்மா இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் யானை வீட்டை உடைப்பதை அறிந்து உயிருக்கு பயந்து வீட்டின் பின் பகுதியில் அமைந்துள்ள கழிவறையில் உயிர் தப்பிக்க ஒளிந்து இருந்தனர்.

யானைகள் வீட்டின் முன்புறமும் பின்புறமும் நின்றதால் அருகில் உள்ள வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் சிறிது நேரம் அங்கேயே நின்று அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்த பின்பு வனத்துறையினரும் அருகில் உள்ளவர்களும் யானைகளை சத்தம் போட்டு வனப் பகுதிக்குள் விரட்டினார்.

சுமார் ஒரு மணி அளவில் வந்த காட்டு யானைகள் வீட்டை உடைத்து வீட்டின் முன்பு நின்று செடி கொடிகளை சாப்பிட்டு சுமார் மூன்று முப்பது மணி அளவில் யானைகளை விரட்டி வனப்பகுதிக்கு சென்றது.



வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் யானைகள் வீட்டின் வெளியே எடுத்து வீசியது இதில் அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது தகவல் அறிந்து வந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் வனத்துறையினரிடம் எஸ்டேட் மேலாளர்களிடமும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து யானைகள் சேதப்படுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு பண உதவி வழங்கிய சென்றனர். யானைகள் வீட்டின் அருகே வராமல் தடுக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...