கோவையில் கறிக்கோழி விற்பனையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி - சென்னை வியபாரி கைது

கொள்முதல் செய்த கறிக்கோழிக்கு தரவேண்டிய ரூ.47 லட்சம் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாக இருந்த செந்தில் மோகன் என்ற கறிக்கோழி வியபாரியை, தனிப்படையினர் சென்னையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் மோகன் என்பவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வி எம் சி புரோட்டீன் என்ற பெயரில் கறிக்கோழி விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அதற்கான உயிர் கறிக்கோழிகளை கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் சிக்கன் என்ற நிறுவனத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்துடன் வர்த்தக உறவில் இருந்த செந்தில் மோகன் கடந்த ஒரு ஆண்டாக கொள்முதல் செய்யும் கறிக்கோழிக்கு உரிய தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதை அடுத்து கறிக்கோழி மொத்த விற்பனை மைய மேலாளர் செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்துமாறு கூறவே திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதை தொடர்ந்து சுமார் 47 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த செந்தில் மோகனை கைது செய்து பணத்தை மீட்டு தருமாறு கூறி அந்நிறுவன மேலாளர் பாலகுமாரன் என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பந்தய சாலை காவல் நிலைய போலீசார் தலைமறைவான செந்தில் மோகனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் மோகன் சென்னையில் இருப்பது தெரிய வந்த நிலையில் சென்னை சென்ற தனிப்படையினர் செந்தில் மோகனை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில்15 நாள் காவலில் செந்தில் மோகன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...