கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயர் அவர்களிடம் அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு கூறியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (07.11.2023) செவ்வாய்க்கிழமை மாண்புமிகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (07.11.2023) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயர் அவர்களிடம் அளித்து பயன்பெறலாம். மேலும், இக்கோரிக்கை மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...