ஆளுநரை கேவலமாக பேசும் ஆர் எஸ் பாரதி - பதவி கொடுத்து அழகு பார்ப்பதாக திமுக மீது வானதி சீனிவாசன் புகார்

திமுக ஆட்சிக்கு வந்த பின் பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. வேங்கை வயல் மாதிரியான நிகழ்வுகளுக்கு இது வரை தீர்வு இல்லை. பட்டியல் இன மக்கள் பாதுகாப்புக்கு திமுக பங்களிப்பு என்பது இல்லை. தமிழக அமைச்சரவையில் முக்கியத்துவம் இல்லாத துறைதான் பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது என வானதி சீனிவாசன் கூறினார்.


கோவை: கவர்னர் குறித்து கேவலமாக பேசுவதற்காகவே திமுகவில் ஆர் எஸ் பாரதிக்கு ஒரு பதவி கொடுத்து அழகு பார்ப்பதாக வானதி சீனிவாசன் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹாலில் தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் வளரக்கூடிய 100 பெண் குழந்தைகளுடன் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார்.



மோடி மகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி அவர்,



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மோடியின் மகள் என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தபட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுடன் தீபாவளி பரிசுகளோடு தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது.

தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதால், தீபாவளி கொண்டாட்டம், பரிசுகளுடன், “குட் டச்” “பேட் டச்” குறித்து வகுப்புகள் எடுக்கப்படுகிறது. நடிகைகளை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி “டீப் பேக்” புகைபடம் தவறாக பயன்படுத்தபடுகின்றது. இதில் பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது இதனால் அவமானபடுவது நாம் அல்ல. சரியான முறையில் உடனிருப்பவர்களுடன் பேசி, மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டும். காவல் துறையில் தொழில் நுட்ப குழுக்களை பலப்படுத்த வேண்டும், சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தகவல் தொழில் நுட்ப சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசுடன் மகளிர் அணி தலைவராக என்ற முறையில் பேசிய உரிய முயற்சி எடுப்பேன். அதே போல குற்றங்களில் 50 சதவீதம் பெண்கள் வெளியில் சொல்வதில்லை என்பதால் குற்றவாளிகளுக்கு தைரியம் கிடைக்கிறது. கால விரயம் என்பதாலும் பெண்கள் செல்லுவதில்லை என கூறினார். மிசோரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பாஜ்க போட்டியிடுகின்றது.

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆதரவு உயர்ந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் இன குழுக்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளுக்கு பாஜக காரணமில்லை என அவர்களுக்கு தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பின் பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. வேங்கை வயல் மாதிரியான நிகழ்வுகளுக்கு இது வரை தீர்வு இல்லை. பட்டியல் இன மக்கள் பாதுகாப்புக்கு திமுக பங்களிப்பு என்பது இல்லை. தமிழக அமைச்சரவையில் முக்கியத்துவம் இல்லாத துறைதான் பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆர்.எஸ்.பாரதி அநாகரிகமாக பேசுவது என்பது தொடர்கின்றது. அவரது ஒவ்வொரு ஆபாச பேச்சுகளை திமுக தலைமை ரசிக்கின்றது. தொழில் துறையினருக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

பா.ஜ.க தொழில் துறையினருக்கு ஆதரவாக இருக்கும். ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேச வேண்டும் என தமிழக அரசில் இருப்பவர்கள் நினைக்கின்றனர், அது நடக்காது. உங்கள் சித்தாந்தங்களை அவர் பேச வேண்டும் என நினைக்க கூடாது. அவர் சித்தாந்தை அவர் பேசுகின்றார். உங்கள் சித்தாந்ததை நீங்கள் பேசுங்கள்.கவர்னரின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட கூடாது என தெரிவித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...