கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவு - ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என மீனா ஜெயக்குமார் பதில்

மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்துவிட்டார்.


கோவை: கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் 6-வது நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் இல்லத்தில், திமுக முன்னாள் கவுன்சார் எஸ்.எம் சாமி வீட்டில் ஆகிய இடங்களில் 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வந்த நிலையில் மாலை சுமார் 6.30 அளவில் சோதனை நிறைவடைந்தது.

கடந்த நாட்களாக நடைபெற்ற சோதனையில் எந்த விதமான ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை.திமுக மீனா ஜெயக்குமார் அமைச்சர் ஏ.வ வேலுக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார், இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும்,பணமும் ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை எனது கணவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் ஏ.வ வேலுவிற்கு அறிமுகமானவர் என்றும் அமைச்சர் ஏ.வ வேலு கோவை வந்தபோது பொங்கலூர் பழனிச்சாமி தன்னையும் தனது கணவரையும் அறிமுகப்படுத்தியதாக கூறினார்.

அமைச்சர் ஏவா வேலு எங்களுக்கு நெருங்கியவர் என்ற முறையில் வருமான வரி கலந்த இல்லத்தில் சோதனை நடத்தியதாகவும் தனது ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காண்பித்து சரிபார்த்ததால் எந்த விதமான ஆவணங்களையும் வருமானவரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை என்று கூறினார். வருமானவரித்துறை அதிகாரிகள் தனது செல்போனை கைப்பற்றி கொண்டு இன்று மாலை தான் கொடுத்தார்கள்.

சோதனையின் போது பணிவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டார்கள் என்றும் கூறினார். பல்வேறு அமைச்சர்கள் வீட்டில இது போன்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்கின்ற கேள்விக்கு வெளிப்படையாக இது அனைவருக்கும் தெரிகிறது. மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...