உடுமலை அமராவதி ராணுவ பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அமராவதியில் உள்ள அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ராணுவ பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த அமராவதியில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2024-2025 ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பதாரர்கள் https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அடுத்த மாதம் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சேர்க்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த முழுமையான விவரங்களை nta.ac.in; https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...