தேசிய குழந்தைகள் தினம் - கோவையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி கோவையில் நடைபெற்றது. இறுதியாக உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கோவை: தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியார் தொடங்கி வைத்தார்.

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை, மாநில குழந்தைகள் பாதுக்காப்பு சங்கம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் துவக்கி வைத்தார்.



இந்தப் பேரணியில், சமூக பாதுகாப்பு துறையினர் மற்றும் தேசிய குழந்தைகள் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ்யில் நிறைவடைகிறது. பேரணிக்கு முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.



மேலும் இந்நிகழ்வில் நிமிர்வு கலைக்குழுவினரின் பறை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...