தாராபுரம் பகுதியில் மது பிரியர்களால் சுகாதார சீர்கேடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரத்தில் பாருக்கு தடை செய்யப்பட்டதால் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகள் முன்பாக மது பிரியர்கள் மது குடிப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் 12 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 3 மது கடை பாருகளுக்கு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது மது கடைமார்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி இல்லை என கூறி டாஸ்மார்க் நிர்வாகம் பார்களை சீல் வைத்து சென்றது இதனால் பாருக்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக மதுபிரியர்கள் வேறு வழியின்றி வெளியில் பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது அந்த வழியில் செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அதே இடத்தில் சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி சாக்கடை போல் இருப்பதாலும் பல்வேறு நோய்கள் டாஸ்மாக் மூலம் பரப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு டாஸ்மார்க் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...