வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகள் - உடுமலையில் சிறப்பு முகாம்களின் தேதி மாற்றம்

மாற்றி வைக்கப்பட்ட சிறப்பு முகாமை வாக்காளர்கள் பயன்படுத்தி பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொண்டு பயன் அடையுமாறு உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 18 மற்றும் 19 ம் தேதிகளில் வாக்குச் சாவடிகளில் நடைபெற இருந்த 2-ம் கட்ட சிறப்பு முகாம் வருகின்ற 25 (சனி)மற்றும் 26 -(ஞாயிறு) தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி கடந்த மாதம் 27-ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு வழக்கமான திருத்தப் பணிகள் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருத்து பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரிமாற்றம், திருத்தம் செய்தல், வாக்குச்சாவடி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு வாக்காளர் உதவி மைய செயலி மற்றும் இணையதள வாயிலாகவும் நேரில் படிவங்கள் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 4 மற்றும் 5- ம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினரும் பொது மக்களை அழைத்து வந்து திருத்தங்களை மேற்கொண்டனர்.

உடுமலை பகுதியில் நடைபெற்ற இந்த பணிகளை உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் மற்றும் தேர்தல் துணை தாசில்தார் சையது ராபியம்மாள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மேலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம் வருகின்ற 18 மற்றும் 19 ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மாற்றி வைக்கப்பட்ட தேதியில் சிறப்பு முகாமை வாக்காளர்கள் பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொண்டு பயன் அடையுமாறு உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...