கோவையில் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் அதிரடி உத்தரவு

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை - அவிநாசி ரோட்டில், நீலாம்பூரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்த விளம்பர பலகைகள், நேற்று அகற்றப்பட்டன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலை சந்திப்புகள், பிரதான சாலைகளுக்கு அருகில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.

கோவையில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத சமயங்களில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், கோவை நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரால் அகற்றப்பட்டன.

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோதமாக, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பரபலகைகளும், நேற்று அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும். சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் கூறுகையில், ''அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன. அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். இரும்பு சட்டங்களையும் வெட்டி எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களே அகற்றாவிட்டால், ஊராட்சி சார்பில் அகற்றி, அதற்குரிய செலவு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வசூலிக்கப்படும். அறுத்தெடுக்கப்படும் இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...