கோவையில் K'sirs International School சார்பில் பசுமை மாராத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

சுற்றுச்சூழலை தூய்மையாகவும் வைத்திருப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை K'sirs International School சார்பாக நடைபெற்ற பசுமை மாராத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும், பசுமை நகரத்தை உருவாக்க வலியுறுத்தும் விதமாக K'sirs International School சார்பாக மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழலை தூய்மையாகவும் வைத்திருப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.



மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...