கோவையில் மாபெரும் உணவு திருவிழா ஜனவரி 5ம் தேதி துவக்கம் - 3 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு

உணவுத் திருவிழா நடைபெறும் 3 நாட்களும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், சைந்தவி, சத்ய பிரகாஷ் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீதர் சேனா, ஆனந்த் அரவிந்தாக்ஷன், நித்ய ஸ்ரீ ஆகியோரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (CDHA) சார்பில் 'டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்' என்கிற மாபெரும் உணவு திருவிழாவின் 6வது பதிப்பு வரும் ஜனவரி 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.



இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (29.12.23) நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ராமசாமி, செயலாளர் பாலச்சந்தர் ராஜு, பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் 2024 நிகழ்வின் தலைவர் S.டேவிட் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சங்கத்தின் தலைவர் கே.ஏ.ராமசாமி, இந்த உணவுத் திருவிழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும். இதில் கோவையைச் சேர்ந்த 100 உணவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் 160 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சைவ மற்றும் அசைவ உணவுகள், இனிப்புகள், கார வகைகள், சாட் எனும் துரித உணவு வகைகள், கேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்தும் ஒரே இடத்தில் உண்டு மகிழலாம் என கே.ஏ.ராமசாமி கூறினார்.

இந்த உணவு திருவிழாவில் அனைத்து ஸ்டால்களில் உள்ள உணவுகளை மக்கள் உண்டு மகிழ வேண்டும் என்பதற்கேற்ப உணவின் அளவு அமைக்கப்பட்டிருக்கும். விலையும் நியாயமாக இருக்கும். இந்த உணவு திருவிழா நிச்சயமாக கோவை மக்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும். மேலும் இது நிச்சயம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என சங்கத்தின் செயலாளர் பாலசந்தர் ராஜு கூறினார்.



டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் 2023ன் தலைவர் டேவிட் கூறுகையில், நுழைவு கட்டணம் விலை ரூ.249 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. கோயம்புத்தூரில் உள்ள அனைத்து முன்னணி உணவகங்களில் நேரடியாகவும் Book My Show மற்றும் Paytm Insider செயலிகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெறலாம். 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியின் டிக்கெட்டுகளை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் கொடிசியா மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

கோவிந்தராஜ் கூறுகையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் , கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனர் சதீஷ் குமார் ஆகியோர் விழாவை சங்க அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் தொடங்கி வைக்க உள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வு நடைபெறும் 3 நாட்களும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், சைந்தவி, சத்ய பிரகாஷ் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீதர் சேனா, ஆனந்த் அரவிந்தாக்ஷன், நித்ய ஸ்ரீ ஆகியோர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மயிலாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் போன்ற பல தமிழ் கலாச்சார கலைகள் இடம்பெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 89254 74400, 8925674400 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...