கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் டாக்டர் V. கலைசெல்வன் பட்டங்களை வழங்கினார்.


Coimbatore: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் முனைவர் R. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் S. ராம் காந்த் தலைமை தாங்கினார்.



பட்டமளிப்பு விழாவில் இந்திய மருந்தியல் ஆணையத்தின் (IPC) செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குனர் டாக்டர் V. கலைசெல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். பல்கலைக்கழக மற்றும் GPAT தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



சிறப்பு விருந்தினர் பேசுகையில் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதில் மருந்தாளுனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று வலியுறுத்தினார். மருந்தாளுனர்களின் தொழில்முறை பொறுப்பு குறித்தும் அவர் மாணவர்களுக்கு வழிகாட்டினார்.



இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் மோகன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...