திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

விண்ணப்பதாரா்கள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநங்கையா்கள் சொந்த முயற்சியில் படித்து தனித்திறமையைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவா்களில் ஒருவருக்கு முன்மாதிரி விருது திருநங்கையா் தினமான 2024 ஏப்ரல் 15 -ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

இவ்விருது வழங்குவதற்குத் தகுதியான திருநங்கையா்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூ.1 லட்சம் காசோலை, சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். விண்ணப்பதாரா்கள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

விண்ணப்பதாரா்கள் உரிய கருத்துருக்களுடன் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை ஜனவரி 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலமாகவும், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலும் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...