கோவையில் நள்ளிரவிரல் அசைவ கடையில் குவிந்த மக்கள் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் போலிசார் லேசான தடியடி நடத்தினர்.


கோவை: உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டட்டம் நள்ளிரவு முதலே ஆரம்பித்தது. இந்த நிலையிலே, கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொண்டாட்டத்தில் ஆடி, பாடி குதூகலத்துடன் புத்தாண்டை ரசித்த பொதுமக்கள், அதன் பின்னர் ருசிக்க திட்டமிட்டு உணவங்களை முகாமிட்டனர். இரவு 1 மணிக்கு மேல் உணவு உட்கொள்ள, அசைவ உணவகங்களை பெரும்பாலானோர் தேடி சென்றனர்.



அதன் அடிப்படையில் கோவை கோட்டைமேடு பகுதில் பிரியானி, கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளை உட்கொள்ள அசைவ பிரியர்கள் அலைமோதினர்.



இதனால் இரவில் அந்த பகுதி சாலைகள் நெரிசலாக காணப்பட்டது.



காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையிலெ, போலிசார் லேசான தடியடி நடத்தினர்.



இதனால் அசைவ பிரியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புத்தாண்டு கொண்டாட்டிவிட்டு அசைவம் ருசிக்க வந்தவர்கள் அடி வாங்கி வீடு திரும்பினர். லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...