கோவையில் 11 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 1,451 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, 11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: தகவல் நெகிழி என்று அழைக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, பாலித்தீன் கவர் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 1,451 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...