கோவையில் இன்று ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியில் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் இன்று மட்டும் 621 கடைகளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது. இதில் கிழக்கு மண்டலத்தில் 46 +கிலோ, மேற்கில் 16+, வடக்கில் 24+, தெற்கில் 20+ மற்றும் மத்திய மண்டலத்தில் 63+ கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து மண்டலங்களிலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.1,28,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...