கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டி

கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளா்ச்சித் துறை மூலம் 2023-24 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் ஜனவரி 9 ஆம் தேதி பள்ளி அளவிலும், 10 ஆம் தேதி கல்லூரி அளவிலும் மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் டவுன்ஹால் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளன.

பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் வாயிலாக தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்தும், கல்லூரி மாணவா்கள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வாயிலாக தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் கட்டாயம் பரிந்துரைக் கடிதம் பெற்றுவர வேண்டும்.

ஒரு பள்ளி, கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் 3 மாணவா்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுத் தொகைகள் வழங்கப்படவுள்ளன.

போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசுத் தொகைகள் மற்றொரு நாளில் வழங்கப்படும். சென்னை தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் இருந்து முத்திரையிட்ட உறைகளில் இருந்து பெறப்படும் தலைப்புகள், போட்டி தொடங்குவதற்கு முன்னா் நடுவா்கள், மாணவா்கள் முன்னிலையில் எடுத்து அறிவிக்கப்படும். ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...