சரவணம்பட்டி கரட்டுமேட்டில் பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஊழியருக்கு பாஜக கோவை மாவட்ட தலைவர் கண்டனம்

கோவிலில் அன்னதான கூடத்தில் உணவு பரிமாற வந்த பாக்கியலட்சுமி மற்றும் ரத்தினம் ஆகிய இரு பெண் ஊழியர்கள், பக்தர்களுக்கு சரிவர உணவு பரிமாறவில்லை என்றும், பக்தர்கள் மீது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், அன்னதான கூடத்தில், பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஹிந்து அறநிலையத்துறை ஊழியரின் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் அந்தப் பெண் ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் மாவட்ட பாஜக வலியுறுத்துகிறது.

ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோயிலில், தமிழக அரசின் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற பக்தர்களை, அன்னதானம் சாப்பிட வருமாறு கோயில் ஊழியர்கள் அழைத்துள்ளனர். அன்னதான கூடத்தில் உணவு பரிமாற வந்த பாக்கியலட்சுமி மற்றும் ரத்தினம் ஆகிய இரு பெண் ஊழியர்கள், பக்தர்களுக்கு சரிவர உணவு பரிமாறவில்லை என்றும், பக்தர்கள் மீது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அன்னதானத்தில் அமர்ந்திருந்த இரு பெண் பக்தர்கள் இலையில் சாப்பாடு போடும்படி கேட்டுக் கொண்டே இருந்தும், அதை காதில் கூட வாங்காமல் இந்த இரு பெண் ஊழியர்கள் சென்றுள்ளனர்.. ஒரு குழந்தை மறு சோறு போடுமாறு கேட்டபோது, அதெல்லாம் போட முடியாது எழுந்து போ என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதை தட்டி கேட்ட பக்தர்களிடம், தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகித்ததுடன், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது தேவையென்றால் உண்ணுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று கேவலமாக பேசி உள்ளனர்.

அன்னதானத் திட்டத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த பக்தர்கள், பெண் ஊழியர்களின் கேவலமான பேச்சால் உணவை அருந்தாமல் பாதியிலேயே எழுந்து சென்றுள்ளனர். கோயில்களில் வரும் வருமானத்தில், பக்தர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தில் இது போன்ற திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஹிந்து அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவிய போதும், சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும், இன்னும் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஹிந்து அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதை வன்மையாக கண்டிக்கும் கோவை மாநகர பாஜக, பக்தர்களிடம் கேவலமாக நடந்த அந்த ஊழியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...