கோவை விழா 16 ஆம் ஆண்டு பதிப்புடன் இணைத்த ஜி.கே.என்.எம் மருத்துவமனை

முன்னரே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் பெண்களை தாக்கும் வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் முதன்மையானதாகும். புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்று மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் லதா பாலசுப்ரமணியம் கூறினார்.


கோவை: கோவை விழாவின் 16 ஆம் ஆண்டு பதிப்பின் ஒரு பகுதியாக, கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில், பெண்களுக்கான இலவச வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகள் வழங்கப்பட்டன. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



ரூபாய் 2500 மதிப்பிலான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாம், மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் லதா பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.



மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னரே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் பெண்களை தாக்கும் வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் முதன்மையானதாகும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண்கள் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும், மேலும் அணைத்து வயதினர் பெண்களும் ஹெச். பி. வி. வைரஸ்க்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். புற்றுநோய் இல்லா கோவையை உருவாக்குவதே ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலையாய நோக்கமாகும்.



இதன் ஒரு முயற்சியாக, வாரந்தோறும், அனைத்து வியாழக் கிழமையிலும், பெண்களுக்கான இலவச வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...