ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு -கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு


கோவை மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்டில் குப்பை மேலாண்மை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியின் 2017-18ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.

கடந்த 1996ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்ட பட்ஜெட்டில் மொத்த வருமானம் 1072 கோடிகள் எனவும் செலவீனம் 1059 கோடி ரூபாய் எனவும் உபரி நிதி 13 புள்ளி 04 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு தொகைகளான தலா கோடி ரூபாய் பெறப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பை மேலாண்மையின் ஒரு பகுதியாக குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்தவுடன் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் சென்சார் திட்டம் செயல்படுத்த 15 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதே போல் கோவை மாநகராட்சியில் உள்ள 8 குளங்களை மேம்படுத்த 15 கோடி ரூபாயும், அம்ருட் திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வார்டுகளை மேம்படுத்த 428

லட்சம் ரூபாயும் , வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 171.86 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...