திருப்பூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்

பி.ஏ.பி.யில் போதிய நீர் இல்லாததால் 5 சுற்று வழங்க வேணடிய நீர் தற்போது 2 சுற்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகிவிட்டதாக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் பொங்கல் விழா மற்றும் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.



இந்த விழாவிற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் செல்லமுத்து சிறப்புரையாற்றினார்.



மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் இ.பாலசுப்பிரமணியம். மாநில மகளிர் அணி தலைவி ராஜரீகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், தமிழகத்தில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் கனமழை பெய்து பெருத்த சேதங்களை ஏற்படுத்தியும், மற்ற மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழையும் பெய்துள்ளது.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஒரு உழவு மழை என்று சொல்லக்கூடிய 25 மி.மீ. கூட மழை பெய்யவில்லை.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பாசனம் பெறும் பி.ஏ.பி. மற்றும் அமராவதியில் அணைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அணை நிரம்பி, செப்டம்பரில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்த அமராவதி அணை டிசம்பர் மற்றும் ஜனவரியில் மழை பெய்து, அணை நிரம்பியபோதும், காலம் கடந்த நிலையில் பழைய, புதிய அமராவதி பாசன பகுதிகளில் சுமார் 30 சதவீதம் விவசாயிகள் மட்டுமே நெல் சாகுபடி செய்துள்ளனர். மீதம் 70 சதம் தரிசு நிலமாக உள்ளது.

பி.ஏ.பி.யில் போதிய நீர் இல்லாததால் 5 சுற்று வழங்க வேணடிய நீர் தற்போது 2 சுற்று மட்டுமே வழங்கப்பட்டுளள்து. மானாவாரி நிலங்களில் மழையை நம்பி பயிர் செய்த மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை மற்றும் பயிறு வகைகள் அனைத்தும் நீர் இல்லாமல் கருகி போய் விட்டது.

எனவே, இவை அனைத்தையும் சரியாக V.A.O.க்கள் மூலமாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகள் மற்றும் மக்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற அரசு நடவடிக்கை வேண்டும்.

தற்போது தாராபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் பெருமளவில் தென்னையை சொட்டு நீர் பாசனம் மூலமாக பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 2018-19 இல் ரூ.20க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 9 ரூ. 10 ரூ.க்கு விற்கப்படுகிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றுவதாக கூறி மத்திய அரசு நேபட் நிறுவனம் மூலம் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்கிறது. சென்ற ஆண்டு கிலோ ரூ.108.60 க்கு கொள்முதல் செய்த அரசு, இவ்வாண்டு ரூ.3 உயர்த்தி ரூ.111.60 க்கு கொள்முதல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

கொப்பரை கொள்முதல் மூலம் ஒரு சதவீதம் கூட விவசாயிகள் பயனடைவதில்லை. மாறாக விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் கொப்பரை வைத்து விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.5 கொடுத்து லாபம் முழுவதும் வியாபாரிகளுக்கும், களம், ஆட்கள் வைத்து கொப்பரை தயார் செய்யும் பெரிய விவசாயிகளுக்கும் கிடைக்கிறது.

எனவே, நேரடியாக விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பயனாக இருக்கம். மேலும் மானிய விலையில் பாமாயில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதை நிறுத்தி, ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணையை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தென்னை விவசாயிகளை காப்பற்ற முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த தை மூன்றாம் நாள் உழவர் தின பொங்கல் விழாவில் நலிவடைந்த விவசாயிகள் 20 பேர்களுக்கு விதை இடுபொருள்கள் மற்றும் ரொக்க பணம் ஆயிரம் மாநில தலைவி ராஜரீகா ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

2024-நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-திமுக உள்ளிட்ட எந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து உழவர் உழைப்பாளர் கட்சி யாருக்கு ஆதரவாக இருப்போம் என அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...