கோவை டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சுத்தம் செய்தார்

இந்து மதங்களின் அடையாளத்தை சீர் அழிப்பது. கேவலம் படுத்துவது தான் திமுகவினர் வேலை. ஜல்லிக்கட்டு என்பது இந்து மதத்தின் சனாதனம் ஒன்றாகும். கோயிலில் சாமி கும்பிட்ட பிறகுதான் காளைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


கோவை: அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆணைக்கிணங்க அருள்மிகு ஸ்ரீ கோனியம்மன் திருக்கோயிலை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்,



15-ம் முதல் 21-ம் தேதி நாடு முழுவதும் கோவிலை தூய்மை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தெரிவித்தனர். இந்த கோவில் நல்ல முறை பராமரிப்பில் இருந்தால் கூடாது. ஒருசில இடங்களில் கூரை மேல் குப்பை உள்ளது. அதனை சுத்தம் செய்தோம். ஒவ்வொரு வீட்டில் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி கேட்டுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பில் வெற்றி பெற்றுள்ளோம். கோவில் கட்டபட்ட இடத்தில் தான் கோவிலை இடித்து மசூதி கட்டினர். அதன் பிறகு தான் மசூதி கட்டப்பட்டது என்றும், மேலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியுள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு சமய அடையாளம் இல்லாமல் திருவள்ளுவர் சிலையை கொண்டு வந்தனர். திருக்குறளில் லட்சுமி, விஷ்ணு போன்ற கடவுள் பற்றி தாம் திருக்குறளிள் உள்ளது. அதை திமுக படித்துள்ளாதா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் ஜல்லிகட்டு, மஞ்சு விரட்டு சாமி வழிபாடு தான் செய்கிறார்கள். இந்து மதங்களின் அடையாளத்தை சீர் அழிப்பது. கேவலம் படுத்துவது திமுகவினர் வேலை என்று விமர்சனம் செய்தார். ஜல்லிக்கட்டு என்பது இந்து மதத்தின் சனாதனம் ஒன்றாகும். கோயிலில் சாமி கும்பிட்ட பிறகுதான் காளைகளை அவிழ்த்து விடுகிறார்கள். ஆளுநர் தமிழக அரசிடம் கணக்கு கேட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...