வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா

தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது.



இதில் 1094 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.



கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் N.R.அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை தாங்கினார்.

முதலாம் நாள் விழாவில், பெங்களூரு, எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரிஆஷிஷ் ஹுஷு, சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கினர்.

மேலும் அவர் பேசும்போது, பட்டம் பெற்று சிறந்த நிறுவனங்களில் பணிபுரியும் போது நம் கண்முன்னே பறந்து விரிந்து கிடைக்கும் வாய்ப்புகளை திறன்பட உணர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணிபுரிந்தால் நம் நாட்டின் பொருளாதாரம் 20 முதல் 40 சதவீதம் மேம்பாட்டிற்கும் என்பதை உறுதிப்படக் கூறினார்.



இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் ஏர்பஸ் இன்னோவேஷன் சென்டர் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் ராமநாதன் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மற்றும் எம். பி. ஏ, துறையை சேர்ந்த 545 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கினார். மேலும் துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், துணை முதல்வர் ப கருப்புசாமி, துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...