பீளமேட்டில் துவங்கிய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி - தமிழ்நாடு அணி வெற்றி

தமிழ்நாடு ஆண்கள் அணி மற்றும் கர்நாடக அணி மோதிய கூடைப்பந்தாட்ட போட்டி பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆண்கள் அணி 99 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.


கோவை: கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இன்று கேலோ இந்தியா போட்டிகள் துவங்கியது. இப்போட்டியை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

இன்று கோவையில் நடைபெற்ற ஆண்கள் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சண்டிகார் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதேபோல், உத்தரப்பிரதேசம் மற்றும் மிசோரம் அணிகள் மோதிய போட்டியில் உத்தரப்பிரதேசம் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு கூடைப்பந்து போட்டியில் பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.

மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு ஆண்கள் அணி மற்றும் கர்நாடக அணி மோதிய கூடைப்பந்தாட்ட போட்டி பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆண்கள் அணி 99 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் சண்டிகார் மகளிர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 4 சுற்றுகளையும் கைப்பற்றி 109 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.

அடுத்தடுத்த ஆட்டங்களாக, சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மகளிர் அணிகளுக்கிடையே கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேச ஆண்கள் அணி மோதுகின்றன.

இப்போட்டிகளை காண பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். இப்போட்டிகளை காண எந்தவித கட்டணமுமின்றி பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...