வால்பாறை அருகே தேயிலைத்தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகளால் தேயிலை பறிக்கும் தொழில் பாதிப்பு

டுமலை எஸ்டேட் பகுதியில் காலையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றபோது,தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் உள்ளதைப்பார்த்து தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். பின்னர், வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றி வருகிறது. கால சூழ்நிலை மாற்றத்தால் காட்டு யானைகள் வால்பாறை பகுதியில் இருந்து கேரளா வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் காலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது தேயிலை தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் இன்று உள்ளது. தொழிலாளர்கள் அச்சத்தில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு யானைகளை அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் விரட்டினார்.

தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தேயிலை பறிக்கும் வேலையை ஆரம்பித்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இந்தப்பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...