தி.மு.க ஆட்சியில் பத்திரிகையாளர் உயிருக்கே அச்சுறுத்தல் - பா.ஜ.க தேசிய மகளிர் தலைவி வானதி சீனிவாசன் கண்டனம்

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த, 'நியூஸ் 7 தமிழ்' செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு (ஜனவரி 24) அவரது வீட்டுக்கு அருகிலேயே சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல்லடம் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்களை தனது செய்திகள் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் நேசபிரபு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது. திமுக அரசை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நள்ளிரவில் பெரும் படையுடன் வீட்டு சுவர் ஏறி கைது செய்கிறது காவல் துறை.

ஆனால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், கனிமவள கொள்ளை என கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல் துறை கண்டுகொள்வதில்லை. இதற்கு திமுகவினரால் காவல் துறையினர் கைகள் கட்டப்பட்டிருப்பதே காரணம். எனவே, நேசபிரபுவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். நேசபிரபுவுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...