பல்லடம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் கண்டனம்

நேசபிரபு ஒரு துடிப்பான செய்தியாளராகப் பணியாற்றியவர். அவரை கொலைவெறியுடன் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இது குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல்லடத்தில் செய்தியாளர் நேச பிரபு மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என அவர் முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் அளித்தும் காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்காதது கண்டனத்திற்குரியது.

நேசபிரபு ஒரு துடிப்பான செய்தியாளராகப் பணியாற்றியவர். அவரை கொலைவெறியுடன் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன். செய்தியாளர் நேசபிரபுவிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...