ஆங்கில சொற்கள் கூறுவதில் உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் புதிய சாதனை

: ஆறே வயதான சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த 16 ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.


கோவை: கோவை துடியலூர் மிஸ்டர் தேவ்ஸ் இண்டர்நேஷனல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஆறு வயது சிறுவன் ஆங்கில சொற்கள் கூறுவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன், ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன். ஆறு வயதான சிறுவன் லோகித் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியி்ல் உள்ள மிஸ்டர் தேவ்ஸ் சர்வதேச அகாடமியில் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் கூடுதலாக பயின்று வருகிறார்.

இந்நிலையில் லோகித்தின் நினைவாற்றல் திறமையை கண்ட அகாடமியின் நிர்வாக இயக்குனரும், பயிற்சியாளருமான தர்ம தேவ் சிறுவனுக்கு தனியாக பயிற்சி அளித்துள்ளார். இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.



குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை தனித்தனியாக கூறியும், அதே நேரத்தில் முழுமையான சொல்லாகவும், அதன் ஆங்கில பொருளையும் ஐந்து நிமிடம் பதினேழு விநாடிகளில் கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சிறுவன் லோகித்தின் இந்த அரிய சாதனை ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

சிறுவன் லோகித் இதே போல 200 நாடுகளின் பெயர்களை கூறி ஏற்கனவே ஒரு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில்,தற்போது ஆறே மாதத்தில் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளது குறிப்பிடதக்கது.

சிறுவன் லோகித்துக்கு மிஸ்டர் தேவ்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் சக மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த 16 ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.

மேலும், மோனோஅல்ட்ராமிக்ரோஸ் கோபிக்சிலிகோவோல்கானோகோனியோசிஸ் - 46 எழுத்துக்கள்; Aequeosalinocalcalinoceraceoaluminosocupreovitriolic - ஆங்கிலத்தில் 52 எழுத்துக்கள் நீளமான சொல் 2023 ஆகும்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...