பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சடையக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டபூபதி. ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றுக் கொண்டு பொள்ளாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு மீண்டும் சடையக்கவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆட்டோ ஓட்டுனரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்தால் சாலையில் கொட்டி வைத்த ஜல்லிகற்கள் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி ஓட்டுனர் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் ஆட்டோ ஓட்டுனர்களும், பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்றப்பட்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...