தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண் - பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்

ஈஷாவின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் தினந்தோறும் தோராயமாக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்படுகிறது.


கோவை: பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள சத்குரு அவர்கள், "தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியை கடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.



பெரும்பாலான பாதயாத்திரை பக்தர்களுக்கு கால்களில் ஏற்படும் வெடிப்பு, கொப்பளங்கள் மற்றும் காவடி சுமந்து வருவதால் ஏற்படும் தோள்பட்டை வலி போன்ற உடல் உபாதைகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்படுகிறது.

ஈஷாவின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் தினந்தோறும் தோராயமாக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்படுகிறது.



இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, "தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்ணாக இருந்துள்ளது. பழனி பாதயாத்திரை செல்வோருக்கு பணிவிடை செய்தது எங்களுக்கு கிடைத்த பேறு. இத்தகைய தீவிரமும், பக்தியும்தான் பாரதத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆன்மீகத்தின் நாடியை உயிர்ப்பாக வைத்துள்ளது. என்று கூறியுள்ளார்.

மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் அங்கு இருப்பதால் பாதயாத்திரை பக்தர்கள் ஆதியோகியின் தரிசனத்தையும் பெற்று செல்கிறார்கள்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...