நாயை விட்டு கடிக்கவைத்து கொடுமை - கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட ஆண் புகார்

குடும்ப சூழ்நிலையால் நல்லாம்பாளையத்தில் வீட்டு வேலை செய்ய சென்ற இடத்தில், வினியா என்பவர் தன்னை கொடுமைபடுத்தியதாக பாதிக்கப்பட்ட நபர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர் கூறினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனோஷ்குமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார், அதில், அன்னை இந்திரா நகர், மருதமலை அடிவாரத்தில் நான் குடும்பத்தோடு வசித்து வருகிறேன்.



நான் தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளேன். கடந்த 2021 ஆம் ஆண்டு எங்கள் வீடு உள்ள பகுதியில் இடம் வாங்கி இருப்பதாக கூறி வினியா என்பவர் வந்து இருந்தார்.

அப்போது அவர் எனது குடும்ப சூழலை விசாரித்தார். பின்னர் தங்களது நிறுவனத்தில் வேலை தருவதாக கூறினார். இதை நம்பி அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தேன். சிறிது நாட்கள் அங்கு வேலை செய்தேன். பிறகு அவர்கள் என்னை அவர்களது வீட்டிலே தங்கி வேலை செய்யுமாறு கூறினர். நானும் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக சம்மதித்து நல்லாம்பாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டில் பணிபுரிந்து வந்தேன்.

வீடு வேலை, தோட்ட வேலை என எல்லா வேலைகளையும் நான் செய்து வந்தேன். பணியின் போது என்னை அவர்கள் அடித்து துன்புறுத்தி வந்தார்கள். அப்படி அவர்கள் அடித்து துன்புறுத்தியதால் என் உடல் எங்கும் காயங்கள் ஏற்பட்டது. மேலும் அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாயை விட்டு என்னை கடிக்க வைத்தார்கள்.



அப்போது ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை எடுக்கவும் என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. நானும் பல முறை அங்கிருந்து வெளியேறிவிட முயன்றும் முடியவில்லை. அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு வேலை செய்ததற்கு எந்த விதமான சம்பளமும் தரவில்லை. எனது சான்றிதழ்கள் அனைத்தையும் அவர்கள் வாங்கி வைத்து உள்ளதால் என்னால் என்ன செய்வது என புரியாமல் இருந்து வந்தேன்.



நான் இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதால் அவ்வப்போது எனது மதம் குறித்தும் திட்டுவார்கள். மேலும் என்னை அவர்களது கிருஸ்தவ மதத்திற்கு மாறும்படி கட்டாய படுத்தினார்கள். வினியா மட்டுமல்ல அவர்களது ஆண் நண்பர் ஒருவரும் வீட்டிற்கு வரும் சமயங்களில் என்னை சரமாரியாக அடித்து உதைப்பார். காயங்கள் அதிகமாகி வலியும் அதிகமானது. கடந்த வாரத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி வந்தேன்.

எனவே மேற்படி வினியா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் இருந்து எனது கல்வி சான்றிதழ்களையும், இரண்டு வருட சம்பள தொகையையும் பெற்று தரவும், என்னை துன்புறுத்தி காயப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...