வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் - ஆட்சியரிடம் இளைஞர் மனு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் மாற்றுத்திறனாளி இளைஞர் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் இருப்பதாகவும், இது குறித்த பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அந்த குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.29) மனு அளித்தார்.



பின் இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், அக்குமாடிகுடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடவில்லை என்றும், உபரி நீர் மோட்டார் மற்றும் இரண்டு சார்ட்டுகள் பழுதடைந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதனை சரி செய்யவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...