பண்ணைகிணறு ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பண்ணைகிணறு ஊராட்சியில் கோழி குட்டை, முக்கூடு ஜல்லிப்பட்டி, கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகின்றது.



இந்த நிலையில் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்ட முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது, மகளிர் உதவி தொகை எங்கள் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. மேலும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளோம்.



ஆகையால் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரிகள் முறையாக களஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் உடுமலை வட்டாட்சியர் சுந்தரத்திடம் கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வட்டாட்சியர் சுந்தரம் சில தினங்களில் நேரில் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...