கோவையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான "மை ஷாப்பிங் மை பேக்-2017" கண்காட்சி

ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் (25.03.2017) மற்றும் நாளை மறுநாள் (26.03.2017) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான (மை ஷாப்பிங் மை பேக்-2017) கண்காட்சியை மாநகராட்சி ஆனையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று காலை 11.00 மணியளவில் துவக்கி வைத்தார். இதில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை கடை விற்பனை உரிமையாளர்கள், பாலித்தீன் பை விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கலந்து கொண்டனர். 

 

இது குறித்து மாநகராட்சி ஆனையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்; மே-1ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஈ50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடைசெய்யப்படவுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆகவே, தடைசெய்யப்பட்ட  50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 



மேலும், பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான வழி மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். குறிப்பாக வியாபாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த மாதிரியான செயல்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய முயற்சி தான் இந்த மை ஷாப்பிங் மை பேக் கண்காட்சி. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான பொருட்களும் இயற்கைக்கு உகந்த பொருட்கள் தான் உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். முக்கியமாக இத்திட்டம் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும், அதுமட்டும்மல்லாமல் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இத்திட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 



இக்கண்காட்சியில் கேரளா, அசாம், மும்பை ஆகிய மாநிலத்தில் இருந்தும் பல்வேறு வகையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் மக்களுக்காக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவையில் உள்ள விவசாயிகள், முதியோர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பல்வேறு வகையில் இயற்கைக்கு உகந்த பொருட்களை தானே தயாரித்தும் கண்காட்சியில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். பேப்பர் பேக், துணி பேக், தேங்காய் நாரில் ஆனா தொட்டிகள் மட்டும் வாழையிலை போன்ற பல்வேறு வகையிலான இயற்கை பொருட்களும் இக்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை மாநகராட்சி மற்றும் சுவச் பாரத் அம்பாஸ்டர் ஏற்பாடு செய்தது. 



Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...