கோவை ஈஷா கல்லுாரியில் அடுத்த மாதம் 10ம் தேதி(10.02.2024) மாபெரும் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாமில், உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம் மூலமாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், கோவை - பாலக்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், (10.02.2024) அன்று நடத்தப்படுகிறது.

இதில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இம்முகாமில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்று, வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பணி நியமன உத்தரவு, உடனுக்குடன் வழங்கப்படும். இதன் காரணமாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்தாகாது. கூடுதல் விபரங்களுக்கு, 94990-55937 என்ற எண்ணுக்கு காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...