சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக கூட்டம்- கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA., அறிவிப்பு

(31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும் கூட்டம் நடைபெறும் என கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA, அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ நேற்று (ஜன.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக, பகுதிச் செயலாளர்கள்‌, வட்டக்கழகச் ‌செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், BLA-2, BLC பொறுப்பாளர்கள் கூட்டம் கீழ்காணும் பகுதிகளில், கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

அதன்படி (31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும், (01.02.2024)ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 1, மங்கள் மஹால் சிங்காநல்லூர் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி- 1, Trinity ஹோட்டல், பீளமேடு புதூர் பகுதியிலும், (02.02.2024) ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பீளமேடு பகுதி-2, வைஸ்ணவா ஹால், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி-3, செளரிபாளையம், Society Hall பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தேதிகளில் நடைபெற இருக்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, OMR sheet பணிகள், ஆலோசனை கூட்டத்திற்கு அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு, தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...