குடியரசுத் தலைவர் உரைக்கு திருத்தங்கள் கோரி பி.ஆர். நடராஜன் எம்பி நோட்டீஸ் தாக்கல்

குடியரசுத் தலைவர் உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று பி.ஆர். நடராஜன் எம்பி தெரிவித்துள்ளார்.


கோவை: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சில திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர், பி.ஆர். நடராஜன், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில திருத்தங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதன் விவரங்கள் வருமாறு: குடியரசுத் தலைவர் உரையின் இறுதியில் கீழ்க்கண்டதைச் சேர்த்திட வேண்டும். இந்த உரையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அதிலும் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்பதைக் குறிப்பிடவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.”

“இந்தியப் பொருளாதாரம் ஆழமான மந்தநிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது பற்றி ஒன்றும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” “மணிப்பூர் பிரச்சனையைக் கட்டுப்படுத்திட டபுள் என்ஜின் அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது என்பது குறிப்பிடப்படாததற்காக வருந்துகிறேன்.”

“கூட்டாட்சித் தத்துவம் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், மாநில அரசாங்கங்கள் மீது அரசமைப்புச்சட்டப் பங்கினை அரித்துவீழ்த்தும் விதத்தில் ஆளுநர்களின் மாளிகைகள் பயன்படுத்துவது அதிகரித்து இருப்பது குறித்தும், அதிகாரங்களை மையத்தில் குவிப்பதற்கான விருப்பம் அதிகரித்து வருவது குறித்தும் எதுவும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” இவ்வாறு பி.ஆர். நடராஜன் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...