கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- கோவையில் சிபிசிஐடி அதிகாரிகள் முன் சயான் ஆஜர்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயான், காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு ஆஜராக வருகை புரிந்தார்.


கோவை: 2017ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மை காலமாக இவ்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் தொடர்ந்து அனுப்பிய நிலையில் இன்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு சயான் ஆஜராக வருகை புரிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...