குனியமுத்தூரில் ஒரே மேடையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத மணமக்களுக்கு திருமணம்

ஆறு ஜோடி இந்துக்கள், மூன்று ஜோடி கிறிஸ்தவர்கள், பதினான்கு ஜோடி இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு அவரவர் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.


கோவை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர்.

75 பெண்களுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு, சென்னையில் 17 ஜோடிகளுக்கும், திருச்சியில் 25 ஜோடிகளுக்கும் கல்யாணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் ஏழை எளிய பெண்கள் 23 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.



கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து வந்து திருமண விழாவில் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மணமக்கள் மணவறைக்கு கேரள சண்டை மேளம் முழங்க உற்சாகமுடன் வரவேற்கப்பட்டனர்.

நல்லிணக்கத்தை வெளிப்படும் விதமாக ஒரே இடத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சார்ந்த 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆறு ஜோடி இந்துக்கள், மூன்று ஜோடி கிறிஸ்தவர்கள், பதினான்கு ஜோடி இஸ்லாமியர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.



உற்சாகமுடன் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தனர் . இதில் 23 ஜோடிகளுக்கும் 2 லட்சம் மதிப்பிலான கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள், மளிகை சாமான்கள் சீர்வரிசை தரப்பட்டன. 10 கிராம் தங்கமும் தரப்பட்டன. இதில் ஒவ்வொரு மதத்தவருக்கும் அவரவர் மதங்களின் வழிகாட்டுதலாக இருக்கும் குர்ஆன் பைபிள் பகவத் கீதை தரப்பட்டன.

இந்த விழாவில் கலந்து கொண்ட 2000 பேருக்கும் அசைவு உணவு பரிமாறப்பட்டன. வறுமையில் வாடிய ஏழை எளிய பெண்களுக்கு வாழ்வில் மிக முக்கியமான தருணத்தை ஏற்படுத்தித் தந்த அமைப்பினருக்கு மணமக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மனதார அவர்களை பாராட்டினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...