கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லாவண்யா ஜுவல்லரிக்கு சொந்தமான ரூ.34.11 கோடி சொத்துக்கள் முடக்கம்

பண மோசடி தொடர்பாக லாவண்யா ஜுவல்லரி நகைக்கடை மீது, ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் லாவண்யா ஜுவல்லரி என்ற தங்க நகை கடை உள்ளது. இங்கு ஏலச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகையில் மக்களின் பணத்தை வாங்கி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த நகைக்கடை மீது மோசடி வழக்கு பதிவானது தெரியவந்தது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது 65 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும், பல்வேறு மோசடிகளில் நகை கடை மற்றும் அதன் சகோதர நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த நகைக்கடையை மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை பெயரில் இருந்த ரூபாய் 34.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு இடம், 4 விலை நிலம், ஒரு அடுக்குமாடி வீடு என சென்னை, கோவையில் உள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். நகைக்கடையின் மீது முறையற்ற வகையிலான பணமோசடி பி.எம்.எல்.ஏ வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...