போதைப் பொருள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி அங்கலக்குறிச்சியில் மாரத்தான் போட்டி

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் விக்னேஸ்வரா தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.



போட்டியை ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



இன்றைய காலகட்டத்தில் போதை பழக்கபழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீள வேண்டும், மாணவ மாணவிகள் செல்போனில் மூழ்கிக் கிடப்பதால் ஞாபகத்திறன் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் தவறாக வரும் பதிவுகளை பார்ப்பதனால் தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது. இதை மாணவ மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...