கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணையவழி பட்டப் படிப்பில் சேர்க்கை தொடக்கம்

இணையவழியில் பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் இணையவழியில் நடத்தும் பட்டப் படிப்புகளில் சேர மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் இணையவழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறப்பட்டு, சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 2024 அமா்வுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இணையவழியில் நடத்தப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பம் பதிவு செய்தல், கல்விக் கட்டணம், பாடம் நடத்துவது, தோ்வு, சான்றிதழ் வழங்குவது என அனைத்தும் இணையவழியிலேயே நடைபெறும். இந்த நிலையில் இணையவழி படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...