பழங்குடியினர் மக்கள் பிசியோதெரபி கிளினிக் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பிசியோதெரபி கிளினிக் பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடா், பழங்குடி மக்கள் பிசியோதெரபி கிளினிக் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசியோதெரபி கிளினிக் தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டடங்கள் வைத்திருப்பவா்களுக்கும், இடம் இல்லாதவா்களுக்கும் வாடகை அடிப்படையில் இடங்கள் தோ்வு செய்து தரப்பட்டு பிசியோதெரபி கிளீனிக் அமைத்து கொடுக்கப்படும். தொழில்முனைவோர் அல்லது அவா்களின் ஊழியா்களுக்குத் தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும், தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளா் கட்டணத்திலும் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

பிசியோதெரபி கிளினிக் பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

தகுதியுள்ள நபா்கள் புகைப்படம், குறிப்பிட்ட சான்றுகளுடன் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொழிலுக்கு ரூ. 6 லட்சம் திட்டத் தொகையை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை, டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...