கோவையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு

காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேற்று (பிப்.4) பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த தனலட்சுமி, கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த மகேஷ்வரி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிவகாமி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ரேவதி, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிக்கந்தா் பாட்ஷா சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...